Saturday, July 14, 2012

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் கைது


 ஜெர்மனியிலிருந்து அழைத்து வரப்பட்ட, சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், நேற்று, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.கொள்ளைஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஜெமீன் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவில் பூட்டை உடைத்து, அங்கிருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட, 18 ஐம்பொன் சிலைகள், 2008 மார்ச், 13ம் தேதி, கொள்ளையடிக்கப்பட்டன.விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், நடராஜர் உள்ளிட்ட எட்டு ஐம்பொன் சிலைகள், 2008 மார்ச், 21ம் தேதி, கொள்ளையடிக்கப்பட்டன.ஜெமீன் சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் கோயில், ஐம்பொன் விக்ரகங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடையார்பாளையம் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் தொடர்ந்த வழக்கு, சென்னையிலுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.சிலை கடத்தல் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், விருதுநகர் பார்த்திபன், மதுரை ஸ்ரீராம், விழுப்புரம் மாரிசாமி, ராஜபாளையம் பிச்சைமணி, சென்னையைச் சேர்ந்த பாக்கியகுமார் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, எட்டு ஐம்பொன் சிலைகளை மீட்டனர்.விற்பனைஅவர்களிடம்
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், மேற்கண்ட ஐம்பொன் சிலைகளை, புதுச்சேரியில் ஜோதி ஆர்ட் அண்ட் கிராப்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சஞ்சீவி அசோகன் என்பவரிடம், சில ஆயிரங்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

கடந்த, 2009ம் ஆண்டு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், சஞ்சீவி அசோகனை கைது செய்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அரியலூர் மாவட்டம் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து, கொள்ளையடித்து கொண்டு வரப்படும் ஐம்பொன் சிலைகளை, குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றுக்கு, கைவினை பொருட்கள் என, போலி ஆவணம் தயாரித்து, அமெரிக்காவில் ஆர்ட் மியூசியம் நடத்தி வரும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர், 62, என்பவருக்கு, சஞ்சீவி அசோகன் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

கைது"சர்வதேச சிலை கடத்தல் மன்னன்' என, இன்டர்நெட் மூலம் பிரபலமடைந்துள்ள சுபாஷ் சந்திர கபூரை, கைது செய்வதற்கான நடவடிக்கையில், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.கடந்த, 2011 அக்., 30ம் தேதி, ஜெர்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சுபாஷ் சந்திர கபூரை, தமிழகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., ஆனி விஜயா, டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்டோர், மத்திய வெளியுறவு அமைச்சக உத்தரவுடன், ஜெர்மனி சென்றனர்.ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்துக்குச் சென்ற, தமிழக போலீசாரிடம், நேற்று முன்தினம் சுபாஷ் சந்திர கபூர் ஒப்படைக்கப்பட்டார்.தொடர்ந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சுபாஷ் சந்திர கபூரை, நேற்று, காலை 11.15 மணியளவில், அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தமிழகத்தில் நடந்த பல்வேறு சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.சுபாஷ் சந்திர கபூரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட, அரியலூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராஜ்குமார், போலீஸ் காவல் தொடர்பான மனு மீதான விசாரணையை, வரும் 16ம் தேதிக்கு, ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இதையடுத்து, மதியம் 2.45 மணியளவில், சுபாஷ் சந்திர கபூர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சென்னையிலுள்ள புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.(thanks dinamalar)



No comments:

Post a Comment