Friday, July 20, 2012

இந்த வார டவுண்லோட் - மினி கால்குலேட்டர்

கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது. விண்டோஸ் தரும் கால்குலேட்டரையும் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ், அக்சசரீஸ், கால்குலேட்டர் எனச் சென்று கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தரும் இந்த கால்குலேட்டரை அதன் தோற்றத்திற்காக, தெளிவாகத் தெரியாத தன்மைக்காகப் பலர் விரும்புவதில்லை. டெஸ்க்டாப்பில் ஒரு கால்குலேட்டர் இருந்தால், அதுவும் வசதியாகவும், எளிமையாகவும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் நன்றாக இருக்குமே. அப்படி ஒரு கால்குலேட்டரைத்தான், மினி கால்குலேட்டர் என்ற பெயரில், இணைய தளம் ஒன்று
இலவசமாகத் தருகிறது. இதன் முகவரிhttp://www.softpedia.com/get/ScienceCAD/MiniCalculator.shtml. இந்த தளம் சென்று இதற்கான ஸிப் பைலை டவுண்லோட் செய்து பின்னர் விரித்து இதன் இ.எக்.ஸி பைலைக் கிளிக் செய்து, டெஸ்க்டாப்பில் வைத்துக் கொள்ளலாம். மிகச் சிறியதாக, ஆனால், கருப்பு வெள்ளையில் தெளிவான தோற்றத்தில் இது இருப்பதனைக் காணலாம். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள, சயின்டிபிக் கால்குலேஷனும் இதில் கிடைக்கிறது. பைல் மிகச் சிறியதாக உள்ளதால், (157 கே.பி.) யு.எஸ்.பி. ட்ரைவிலும் எடுத்துச் செல்லலாம். தற்போது இதன் பதிப்பு 1.0.4.8 கிடைக்கிறது. 
இதன் பல பிரிவுகள் நமக்குப் பல்வேறு வசதிகளைத் தருகின்றன. இதனை ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் உள்ள Show Strip என்பது, நாம் மேற்கொள்ளும் கால்குலேஷன் அனைத்தையும் அப்படியே டெக்ஸ்ட்டாக அமைக்கிறது. 
இதனை அப்படியே பைலாக சேவ் செய்திடலாம். கால்குலேஷனில் தவறு இருப்பின் எங்கு என்பதைக் கண்டறியலாம். இதில் ஏற்றப்படும் டேட்டாவினை, Save to File, Copy All, or Clear Strip எனப் பல வகைகளில் பயன்படுத்தலாம். Scientific என்பதனைக் கிளிக் செய்தால், sine, cosine, and tangent எனப் பல சயின்டிபிக் கால்குலேஷன்களை மேற்கொள்ளலாம். கால்குலேட்டர் விண்டோ இயக்கத்தினை அப்படியே அதே நிலையில் சேவ் செய்திட Options கிளிக் செய்து தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அதிக குழப்பமான தோற்றம் இன்றி, மிக மிகச் சிறிய பாக்கெட் கால்குலேட்டர் போல டெஸ்க் டாப்பில் வைத்து இதனை இயக்க நம் அனைவருக்குமே விருப்பமாக இருக்கும். நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.(dinamalar)

No comments:

Post a Comment